"நான் சீக்கிரமே சரியாகி மீண்டு வருவேன்..." - மாணவி பிரியா வாட்ஸ் அப்பில் கடைசியாக வைத்த ஸ்டேட்டஸ்..!

0 11475

சென்னையில், கால் அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா, உயிரிழப்பதற்கு முன், வாட்ஸ் அப்பில் கடைசியாக வைத்த ஸ்டேட்டஸ் இணையத்தில் பரவி வருகிறது.

அதில், "நான் சீக்கிரமே சரியாகி மீண்டு வருவேன்... யாரும் கவலைப்படாதீர்கள், எனது விளையாட்டுகள் என்னை விட்டு போகாது... நான் மீண்டு வருவேன் என நம்பிக்கையோடு காத்திருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இவ்வளவு தன்னம்பிக்கையுடன் இருந்த கால்பந்து வீராங்கனையின் உயிர், மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோய் விட்டதாகவும், பிரியாவின் தோழிகள், நண்பர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments