கனமழையால் சீர்காழி பகுதிகளில் வயல் வெளிகள் உள்ளிட்ட இடங்களில் மார்பளவு தேங்கிய மழை நீர்..!

0 2156

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால், அப்பகுதிகளில் வயல் வெளிகள் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளது.

வேட்டங்குடி பகுதியில் விவசாய நிலங்களில் மழை நீர் அதிகளவில் தேங்கிய நிலையில், மார்பளவு நீரில் நின்று பயிர்களை கையில் ஏந்தி, விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

வேட்டங்குடி பகுதியில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமானதாக தெரிவித்த விவசாயிகள்,

அரசே ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல், வாலியோடையின் கரை பல இடங்களில் உடைந்திருப்பதால்

சாலையில் ஆறுபோல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments