அரசுப்பள்ளிகளில், இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள வகுப்பறைகள் குறித்து ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

0 1985

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அரசு பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள வகுப்பறைகள் குறித்து ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், போதிய இடவசதியின்றி பள்ளி வளாகத்தில் நடத்தப்படும் வகுப்புகள் குறித்த விவரங்களை சேகரிக்கவும் உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது.

மாணவர்களின் அனைத்து நோட்டு புத்தகங்களிலும் இன்றைய தேதிவரை ஆசிரியர் கையொப்பமிட்டுள்ளாரா ? கால அட்டவணை படி பாடங்கள் நடத்தப்படுகின்றனவா ? என்பதை ஆய்வு செய்யுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments