அரசுப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் மாடிப்படிகளில் பாடம் படிக்கும் மாணவர்கள்..!

கல்வராயன்மலை அருகே அரசுப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் மாடிப்படிகளில் அமர்ந்து மாணவர்கள் பாடம் படிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கொட்டபுத்தூரில் அரசு மலைவாழ் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு போதிய வகுப்பறை வசதி இல்லாததால் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் மாடிப்படி மற்றும் வரண்டாவில் அமர்ந்திருப்பது போன்றும் அவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
Comments