பகல் நேரத்தில் சாமியார், இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு.. பிரபல கொள்ளையன் துப்பாக்கி சேகர் தனிப்படை போலீசாரால் கைது!

0 2967

சென்னை புறநகர் பகுதிகளில் பகல் நேரத்தில் சாமியாராகவும், இரவு நேரத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட  கொள்ளையனை போலீசார் கைதுசெய்தனர்.

சிசிடிவியில் பதிவான காட்சிகள் மற்றும் கொள்ளை போன பகுதிகளில் பதிவான தொலைபேசி எண்களை வைத்து தனிப்படை போலீசார் ஆய்வு செய்ததில், பழைய குற்றவாளியான பிரபல கொள்ளையன் துப்பாக்கி சேகர் என தெரியவந்தது.

வில்லிவாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த துப்பாக்கி சேகரை போலீசார் கைது செய்ததுடன் அவரிடமிருந்து 65 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசுகளை பறிமுதல் செய்தனர். துப்பாக்கி சேகர் மீது 65 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments