ஜப்பான் மத்திய "மை" மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

0 2734

ஜப்பான் மத்திய மை (mie) மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

ரிக்டர் அளவுகோலில், 6 புள்ளி 1 ஆகவும், கடலுக்கடியில் 350 கிலோ மீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. ஜப்பான் நேரப்படி இன்று மாலை 5:09 மணியளவில் நேரிட்ட இந்த பூமி அதிர்ச்சி, டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் உணரப்பட்டது.

ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் மற்றும் டோக்கியோ மெட்ரோ ரயில் சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, பின்னர் வழக்கம் போல் சேவையை தொடங்கின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments