ஐ.ஐ.டி. யில் மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பெயிண்டர் கைது

0 3113

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

ஐ.ஐ.டி - யில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவி ஒருவர் சம்பவத்தன்று இரவு ஐஐடி வளாகத்தில் தனியாக நடந்து சென்றார்.

அப்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஒருவர் மாணவியிடம், இரவு நேரத்தில் தனியாக செல்ல வேண்டாம், தனதுபைக்கில் ஏறுங்கள் என்று தொல்லை கொடுத்துள்ளார். பயந்து போன மாணவி காவலாளியிடம் புகார் அளித்தார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த நபர் ஐ.ஐ.டி. யில் பெயிண்டராக பணியாற்றிய வசந்த் எட்வர்ட் என்பது தெரிய வந்தது. போதையில் மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற அவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments