மனு அளித்த ஒரு மணி நேரத்தில் சொந்த வீடு வழங்கிய கலெக்டர்.. மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் உதவி தொகை..!

0 13548

கரூரில் கணவரை இழந்த பெண், 2 பெண் குழந்தைகளுடன் ஆதரவு இல்லாமல் தவிப்பதாக மனு அளித்த சில மணி நேரத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், அந்த பெண்ணுக்கு இலவச வீடு ஒதுக்கி உத்தரவிட்டார்...

கரூர் மாவட்டம் சித்தலவாயை அடுத்த மேலமாயனுர் கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா இவரது கணவர் தமிழ்செல்வன். இவர் இறந்து விட்ட நிலையில், தன்னுடைய இரட்டை பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

கணவர் வீட்டின் ஆதரவு இல்லாத நிலையில் தையல் தொழிலை செய்து கொண்டு, அதில் வரும் வருமானம் மூலம் குடும்பம் நடத்தி வருகிறார். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் ஆட்சியை சந்தித்து இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தார். அது தொடர்பாக விசாரித்த ஆட்சியர் பிரபு சங்கர், வீடு கொடுத்தால் அங்கு சென்று வசிப்பீர்களா ? என கேட்டார். அவர்களும் சரி என சொன்னதால், மனு அளித்த 1 மணி நேரத்தில் அதற்கான ஆணை தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம் சார்பில் தோரணக்கல்பட்டி நேரு நகரில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், விதைப்பெண் சித்ராவின் கையில் வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட அப்பெண் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். 2 பெண் குழந்தைகளிடம் பேசிய ஆட்சியர், அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 8,68,000 மதிப்புள்ள அந்த வீட்டிற்கு மத்திய, மாநில அரசுகளிம் மானியம் போக மீதமுள்ள 1,18,000 ரூபாயை மாவட்ட ஆட்சியரின் விருப்ப உரிமை நிதியிலிருந்து வழங்கியும், பள்ளி செல்லும் குழந்தைகள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் மாதம் 4000 ரூபாய் வழங்கவும் சம்மந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments