கடலூர் மழை-வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு முதலமைச்சர் ஆய்வு

0 2530

கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரண உதவிகளையும் வழங்கினார். கடலூர் கீழ்பூவாணிகுப்பம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கிய விளைநிலங்களை பார்வையிட்ட முதலமைச்சர், விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடம் பாதிப்பு நிலவரங்களை கேட்டறிந்தார்.

சிதம்பரம் வட்டம் வல்லம்படுகையில் ஆய்வு செய்த பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வேட்டி, சேலை போன்ற உடைகளுடன், அரிசி உள்ளிட்ட உணவுபொருட்களையும் வழங்கி, ஆறுதல் கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களையும் முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உரிய முறையில் சேதங்கள் கணக்கீடு செய்யப்பட்டு வருவதாக கூறினார். மக்களின் குறைகள் 5,6 நாட்களில் தீர்த்து வைக்கப்படும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments