தியாகராய நகரில் உணவகத்தின் இரும்பு ஷட்டரில் மின்சாரம் தாக்கி சர்வர் உயிரிழப்பு..!

0 2638

சென்னை தியாகராய நகரில் மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அரியலூரைச் சேர்ந்த பாபு என்பவர், தியாகராய நகர் நாயர் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் 2 நாளைக்கு முன்பு சர்வராக வேலைக்குச் சேர்ந்தார்.

அப்பளம் பாக்கெட் எடுப்பதற்காக உணவகத்தின் இரும்பு கதவில் கை வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

உணவகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments