தனியார் பள்ளிப்பேருந்தின் முன்பக்க படியில் நின்றபடி பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்து, பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு..!

0 15214

ஈரோடு பவானி அருகே, தனியார் பள்ளிப்பேருந்தின் முன்பக்க படியில் நின்றபடி பயணம் செய்த பள்ளி மாணவன், ஓட்டுநர் பிரேக் அடித்தபோது, தவறி விழுந்து, பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தான்.

அம்மாப்பேட்டை குதிரைக்கல் மேடு பகுதியை சேர்ந்த திவாகர், பூதப்பாடி புனித இன்னாசியர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான்.

இன்று காலை வீட்டிலிருந்து பள்ளிக்கு பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தபோது, கோனேரிப்பட்டி கதவணை மின்நிலையம் அருகே விபத்து நேரிட்டது. அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments