சீர்காழி, மயிலாடுதுறையில் இன்று முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு..!

0 2237

அதி கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் நேற்று 20 ஆயிரம் பேருக்கு, கொசுவலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், ஸ்டீபன் சாலை, பல்லவன் சாலை உள்ளிட்ட பகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.

பின்னர் மழைநீர் அகற்றும் பணிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், அனைத்து துறைகளும் இணைந்து மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை சிறப்பாக முன்னெடுத்து வருவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments