மதுரை திருமங்கலம் காட்டு பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் துப்பாக்கிச்சூடு.. ஒருவர் கைது

0 2750
மதுரை திருமங்கலம் அருகே காட்டு பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் நிகழ்ந்த துப்பக்கிச்சூடு தொடர்பாக, ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை திருமங்கலம் அருகே காட்டு பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் நிகழ்ந்த துப்பக்கிச்சூடு தொடர்பாக, ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த கோவிலில் இன்று நடைபெற்ற கிடா விருந்தில் தொழிலதிபர்கள் பலர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. விருந்தில், கணபதி என்பருக்கும், தனசேகரன் என்பவருக்கும் இடையே மதுபோதையில் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

அப்போது, தனசேகரன் தன்னிடமிருந்த ஏர் கன் ரக துப்பாக்கியை எடுத்து கணபதி நோக்கி சுட முயற்சித்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார், தனசேகரனை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments