குழந்தை மருத்துவ செலவிற்காக போதைப்பொருள் விற்பனை : சென்னையில் கைதான தான்சானியா பெண் வாக்குமூலம்

0 2872
குழந்தையின் மருத்துவ செலவிற்காகவே, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக, கைதான தான்சானியா நாட்டைச் சேர்ந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குழந்தையின் மருத்துவ செலவிற்காகவே, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக, கைதான  தான்சானியா நாட்டைச் சேர்ந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை அண்ணா நகர் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், தான்சானியா நாட்டைச் சேர்ந்த பிரிஸ்கா ஹம்சா என்பவர் கோகைன் போதைப் பொருள் வைத்திருந்ததை கண்டறிந்தனர்.

ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 கிராம் கோகைனை அண்ணா நகரில் ஒருவருக்கு விற்க வந்தபோது போலீசாரிடம் அவர் பிடிபட்டார்.

விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியுள்ள அவருக்கு, போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments