தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தல் : அண்ணாமலை குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் கொரட்டகிரியில் இயற்கை வளம் கொள்ளைப் போவதை தடுக்க வேண்டுமென, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கொரட்டகிரியில் இயற்கை வளம் கொள்ளைப் போவதை தடுக்க வேண்டுமென, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரட்டகிரியில் கனிம வளங்களை கொள்ளையடித்த லாரிகளை சிறைபிடித்து, கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, காவல்துறையினர் தாக்கியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
கனிம வளக்கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்தி, கொரட்டகிரி மக்கள் மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திலிருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பாஜக போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
Comments