டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து..!

0 3614

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி வென்றது.

மெல்போர்னில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து, 137 ரன்கள் எடுத்தது.

பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 19 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, வெற்றி இலக்கை எட்டியது.

2010ஆம் ஆண்டிற்கு பின் மீண்டும் உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து, இரு முறை கோப்பையை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் சாதனையை சமன் செய்தது.

உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் வீரர்கள், மைதானத்தில் தங்கள் குழந்தைகளுடன் உற்சாகமாக வலம் வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments