எத்தகைய மழை வந்தாலும் சந்திக்கத்தயார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2414
எத்தகைய மழை வந்தாலும் சந்திக்கத்தயார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, மயிலாடுதுறைக்கு இன்றிரவு புறப்பட்டுசென்று, ஆய்வு செய்ய உள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் 20 ஆயிரம் பேருக்கு, கொசுவலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், ஸ்டீபன் சாலை, பல்லவன் சாலை உள்ளிட்ட பகுதியில் வெள்ள பாதிப்புகளையும் பார்வையிட்டார். மழைநீர் அகற்றும் பணிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

பின்னர் பேட்டியளித்த முதலமைச்சர், அனைத்து துறைகளும் இணைந்து மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை சிறப்பாக முன்னெடுத்து வருவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments