சுற்றுலாப் பயணிகள் வந்த டெம்போ ட்ராவலர் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி விபத்து..!

0 2598

கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுற்றுலாப் பயணிகள் வந்த டெம்போ ட்ராவலர் சிக்கிய விபத்தில் 10பேர் உயிர்தப்பினர்.

கோழிக்கோடு மாவட்டம் வடகரையில் இருந்து 11 பேர் அடங்கிய குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூணாறுக்கு சுற்றுலா சென்றனர்.

டாப் ஸ்டேசனுக்கு சுற்றுலா சென்ற அவர்கள் மூணாறுக்கு திரும்பி வரும் நேரத்தில் குண்டலைப் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கொண்டனர்.

வெள்ளத்தில் டெம்போ டிராவலர் அடித்து செல்லப்பட்டதில் ரூபேஷ் என்பவர் மட்டும் மாயமானார். மற்ற 10பேரும் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments