சிறையில் இருந்து நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் விடுதலை..!

உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
பரோலில் இருந்த நளினி, வேலூர் சிறையில் இருந்தும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர். தூத்துக்குடி சூரப்பநாயக்கன்பட்டியில் பரோலில் இருந்த ரவிச்சந்திரனும், மதுரை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகனும், சாந்தனும், இலங்கை தமிழர்கள் என்பதால் திருச்சி இலங்கை தமிழர் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Comments