அநாகரிகமாக பேசி காவலர் மீது தாக்குதல் நடத்திய பேரூராட்சி தற்காலிக ஊழியர்கள்..

0 2567

கன்னியாகுமரி பேரூராட்சியில் தற்காலிக பணியில் உள்ள வரதன் மற்றும் சதீஷ் ஆகியோர் மதுபோதையில் பேரூராட்சிஅலுவலகத்திற்கு வந்ததோடு அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த காவலர் இருவரிடம் விசாரணை மேற்கொண்டதோடு அங்கிருந்து வெளியேறுமாறு கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந் சதீஷ் அநாகரிகமாக பேசி, தாக்கியதில் காவலர் கீழே விழுந்துள்ளார். 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments