ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் ஒரு இளைஞரை கைது செய்த போலீசார்

0 4465

சென்னையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் ஒரு இளைஞரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராயபுரம் கல்மண்டபம் அருகே போலீசார் நேற்று முன் தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், போலீசாரை கண்டதும் தப்பியுள்ளனர்.

அவர்களை பிடிக்க முற்பட்ட போது, ஒருவனது கைப்பை போலீசாரிடம் சிக்கிக் கொண்ட நிலையில், அதில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு குறித்த குறிப்புகளும், வெடிகுண்டு தயாரிப்புக்கான சில வேதியியல் பொருட்களின் பெயர்களும் எழுதி வைக்கப்பட்ட காகிதங்கள் இருந்துள்ளன.

இதனையடுத்து மூவரையும் விரட்டிப் பிடித்த போலீசார் நாகூர் மீரான் என்ற இளைஞரை கைது செய்து, மற்ற இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments