நாடாளுமன்றத்தின் குளிர்காலக்கூட்டத் தொடர் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்..!

0 2349

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் 7ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இமாச்சலம் மற்றும் குஜராத் சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக குளிர்காலக்கூட்டத் தொடர் வழக்கமான காலத்தை விட்டு சற்று ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் முதல் வாரத்தில் கூட்டத் தொடரைத் தொடங்க நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் இதற்கான பரிந்துரை செய்யப்பட்டது.

புதிய நாடாளுமன்ற வளாக கட்டுமானப்பணிகள் நிறைவு பெறாத நிலையில் தற்போதுள்ள கட்டடத்திலேயே இந்தக்கூட்டத் தொடர் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments