வீட்டிலுள்ளவர்களை கட்டிப்போட்டு கொள்ளையிட்டுச்சென்ற சம்பவத்தில் ஏழு பேர் கைது..!

0 3462

நாமக்கல் மாவட்டத்தில் வீட்டிலுள்ளவர்களை கட்டிப்போட்டு கொள்ளையிட்டுச்சென்ற சம்பவத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடியாரசம்பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் மணி என்பவர் வீட்டில் அவரையும் அவரது மனைவியையும் கட்டிப்போட்டு விட்டு 28 லட்ச ரூபாயும், 18 சவரன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.

குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடிவந்த போலீசார் மல்லூர் சோதனைச்சாவடியில் சந்தேகத்திற்கிடமான 7 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் மணியின் கார் ஓட்டுநர் ராமராஜன் என்பவர் தனக்கு அறிமுகமான மர்மசாமியார் ஒருவருடன் இணைந்து வீட்டிலிருந்தவர்களை கட்டிப்போட்டு விட்டு கொள்ளையடித்ததாக கூறப்படுகின்றது.

தலைமறைவாக உள்ள கார் ஓட்டுநர் ராமராஜன் மற்றும் மர்ம சாமியாருக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments