உணவு தர தாமதமானதால் உணவகத்தை சூரையாடிய மூன்று நபர்கள்..!

0 5496

தஞ்சையில் உணவு தர தாமதமானதால் உணவகத்தை மூன்று பேர் சூறையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

கரந்தை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் ஒருவர் சிக்கன் ரைஸ் கேட்டுள்ளார். கடையிலிருந்தவர் சிறிது நேரம் காத்திருக்க சொன்னதால் வாக்குவாதம் செய்து வெளியேறிய நபர், தனது நண்பர்கள் இருவருடன் மீண்டும் உணவகத்திற்கு வந்துள்ளார்.

மூவரும் அங்கே வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கடையிலிருந்த அடுப்பு, எண்ணெய் மற்றும் உணவுப்பொருட்களை வெளியே தூக்கி வீசினர்.சிசிடிவி காட்சியின் அடிப்படையில் மூவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments