தூய்மைப் பணியாளர்களை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2053

கனமழை பெருவெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களை காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டிருப்பவர்கள்  மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களே என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கலில் நிகழ்ச்சி முடித்து விட்டு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய அவர், வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டினார்.

கனமழையிலும் சென்னையில் தண்ணீர் தேங்கினாலும் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது என்றும், பொதுமக்கள் அனைவரும் இந்த அரசை வாழ்த்துக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இவர்களின் இடைவிடாத பணியே என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments