இமாச்சலப் பிரதேசத்தில் 68 தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு

0 2749

இமாச்சலப் பிரதேசத்தின் 68 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 55 லட்சம் 92 ஆயிரம் வாக்காளர்கள் இன்றைய வாக்குப்பதிவில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

412 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.பல்வேறு சட்டமன்றத் தேர்தல்கள் போலவே இமாச்சலத்தில் இம்முறையும் காங்கிரஸ் -பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இவை தவிர ஆம் ஆத்மி கட்சி, இடதுசாரிக் கட்சிகள், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன.சுமார் 7 ஆயிரத்து 800 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments