மழை நீர் தேங்குவதை தடுக்க கிணற்றில் நீரை சேகரித்து ராட்சத குழாய் மூலம் அகற்றம்..!

0 4047

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மாதவரம் குடியிருப்பு பகுதியில் மழைக்காலங்களில் வெள்ளம் புகுவதை தடுக்க கிணறு அமைத்து, அதில் சேகரிக்கப்படும் மழை நீர், ராட்சத குழாய் மூலம் ரெட்டேரிக்கு அனுப்பபடுகின்றது.   

கணபதி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கடந்த வருட மழையின் போது இங்கு அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. 

இதனை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள்,  20 அடி ஆழ கிணறு அமைத்து, மழை நீர் வடிகால்களில் இருந்து வரும் மழை நீரை அதில் சேகரித்து, பின் ராட்சத குழாய் மூலம்  நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தற்போது தொடர் மழை பெய்து வரும் நிலையில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காததால், அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளை பாராட்டி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments