வைக்கோல் போருக்குள் நுழைந்து கோழியை வேட்டையாட முயன்ற 10 அடி கருஞ்சாரை பாம்பு.!

0 9029

ஈரோடு மாவட்டம் கை காட்டி வலசு பகுதியில், வைக்கோல் போருக்குள் நுழைந்து கோழியை கடிக்க முயன்ற 10 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு பிடிக்கப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.   

செந்தமிழ் நகரை சேர்ந்த திருமூர்த்தி, ஆடு, கோழி உள்ளிட்ட பிராணிகளை வளர்த்து வரும் நிலையில், நேற்றிரவு கோழிகள் அலரும் சத்தம் கேட்டு, அங்கு சென்று பார்த்த போது,  பாம்பு இருந்தது தெரிய வந்தது.

பின்னர் பாம்புபிடி நிபுணருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாம்பு பிடிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments