மதுபோதையில் 2 சிறுவர்கள் தகராறு - தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..!

0 3476

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே 100 அடி சாலையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இரு சிறுவர்களுக்கு தர்ம அடி கொடுத்து மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

நேற்றிரவு 11 மணியளவில் இரு சிறுவர்கள் சாலையின் நடுவே நின்று வாகனங்களை செல்ல விடாமல் தடுத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மக்கள் எடுத்துக் கூறியும் வழிவிடாத சிறுவர்கள், பிடிக்க வந்த போலீசாரையும் மக்களையும் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டனர்.

உதவி ஆய்வாளர் ஒருவர் சமாதானம் பேச வந்த போது, மதுபோதை தலைக்கேறிய ஒரு சிறுவன் உடையை கழற்றி நிர்வாணமாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான்.

ஆத்திரமடைந்த பொதுமக்கள், இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

போலீசார் விசாரித்ததில் இருவரும் மெரினா பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் என்பதும் கோயம்பேட்டில் ஒரு கடையில் செல்போன் சார்ஜ் செய்ய கொடுத்து பின் அதனை காணவில்லை எனக்கூறி போதையில் ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments