அரவை மில் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதால் தூக்கி வீசப்பட்ட பெண் உயிரிழப்பு.!

0 4330

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரவை மில் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதால் தூக்கி வீசப்பட்ட பெண் நூலகர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் உயிரிழந்துள்ளார்.

ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் முரளி என்பவர் தானியங்கள் அரைக்கும் அரவை மில் நடத்தி வருகிறார்.

நூலகப் பணியாளரான இவரது மனைவி கன்னிகாபரமேஸ்வரி இன்று விடுமுறை என்பதால் கணவருக்கு உதவியாக அரவை மில்லில் தானியங்களை அரைத்துக் கொண்டு இருந்த நிலையில் விபத்து நேரிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments