குற்றாலத்தில் வழிப்பறி கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது

0 21819

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கையில் இருந்து குற்றாலம் லாட்ஜில் தங்கி வழிப்பறி உட்பட பல்வேறு குற்ற செயல் புரிவதற்காக 5பேர் கொண்ட கும்பல் வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த கும்பல் சிவகாசி , விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments