இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட மருத்துவர் கைது..!

0 3901

சென்னையில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணிடம் இருந்து 51 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ஜாஃபர்கான் பேட்டை சேர்ந்த மருத்துவரான மனோஜ் என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி லட்சக் கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு, தற்போது திருமணம் செய்து கொள்ளாமல், மனோஜ் வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டபோது, காதலித்து ஏமாற்றி பணம் பெற்றுக் கொண்டு திருமணம் செய்ய மறுத்தது உறுதியானது. இதையடுத்து, மருத்துவர் மனோஜ் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments