இருசக்கர வாகனம் ஓட்டியிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் போக்குவரத்து ஆய்வாளர், பணியிடை நீக்கம்..!

0 15035

சென்னையில், மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி சிக்கிய இளைஞரிடம், ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் போக்குவரத்து ஆய்வாளர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று, அசோக் நகரில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரின் வாகனத்தை மடக்கி, போக்குவரத்து போலீசார் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த நிலையில், அந்த இளைஞர் அபராதம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அபராதம் செலுத்திய பிறகும் பேரம் பேசி போக்குவரத்து ஆய்வாளர் நாகராஜன் 1,000 ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிடுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments