மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர் அரிவாளால் வெட்டி படுகொலை.. தப்பி ஓடிய மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!

0 3489

நெல்லை மாவட்டம்  சீவலப்பேரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்  மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சீவலப்பேரி கோனார் தெருவை சேர்ந்த   கால்நடை விவசாயியான மாயாண்டி என்பவர் வழக்கம் போல் சீவலப்பேரி - கலியாவூர் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டது.

முதல்கட்ட விசாரணையில் இதே பகுதியில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட கோயில் பூசாரியான சிதம்பரத்தின் உறவினர் தான் மாயாண்டி என்பது தெரிய  வந்துள்ளது. எனவே கோயில் பூசாரியை கொலை செய்த கும்பல் தான் தற்போது மாயாண்டியையும் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments