காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை..!

0 3714

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். இதையொட்டி திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றபின், இன்று பிற்பகல் 2 மணிக்கு விமானம் மூலம் பிரதமர் மோடி மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் அவர் காந்திகிராமத்தை வந்தடைகிறார்.

காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 16-வது பட்டமளிப்பு விழா இன்று பிற்பகல் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர், ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் இதில் கலந்து கொள்கின்றனர்.

இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை பிரதமர் மோடி வழங்குகிறார். பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்தியபின் அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு காந்தி கிராம பல்கலைக்கழக வளாகத்தில் 3 ராணுவ ஹெலிகாப்டர்கள் நிற்கும் வகையில் ஹெலிபேடு தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பல முறை ஒத்திகை நடத்தப்பட்டது.

பிரதமர், முதலமைச்சர் வந்து செல்லும் வழித்தடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆள் இல்லா விமானம் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வருகையையொட்டி மதுரை- திண்டுக்கல் இடையே வாகனப் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments