சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!

0 3877

சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை, வரும் 12-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

நாட்டின் ஐந்தாவது மற்றும் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை, நாளை பெங்களூருவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்நிலையில், வரும் 12-ம் தேதி சென்னையில் இருந்து மைசூரு செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து, மற்ற 6 நாட்களில் ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரலில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், பிற்பகல் 12.20 மணிக்கு மைசூரை சென்றடையும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments