1 ஆம் வகுப்பு மாணவிக்கு கால் தொடை எலும்பு முறிந்த விவகாரம் - பள்ளி நிர்வாகி மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது வழக்கு..!

சென்னையை அடுத்த ஆவடி அருகே தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கால் தொடையில் எலும்பு முறிந்த விவகாரத்தில், 25 நாட்களுக்கு பின் பள்ளி நிர்வாகி மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமுல்லைவாயலில் இயங்கி வரும் ஜி.கே ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் பயின்று வந்த அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரின் 6 வயது மகள், கடந்த மாதம் 13ஆம் தேதி பள்ளியில் உள்ள கழிவறைக்கு செல்லும்போது விழுந்து காயமடைந்ததில் தொடை எலும்பு முறிந்தது.
இதனால் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆனந்த் அளித்த புகாரில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments