உயிரிழந்த மனைவியின் உடலுடன் 3 நாட்கள் இருந்த கணவர் மற்றும் இரண்டு மகன்கள்..!

0 17944

மதுரையில் இறந்த மனைவியின் பிரிவை தாங்க முடியாமல், உடலுடன் கணவர் மற்றும் மகன்கள் 3 நாட்கள் இருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரை எஸ்.எஸ் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் - மாலதி தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மருத்துவ படிப்பை முடித்துள்ள நிலையில், இளைய மகன் தேனி மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார்.

இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து மாலதி உயிரிழந்ததால், அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வந்து கணவர் பாலகிருஷ்ணன் மற்றும் இரு மகன்கள் குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்துள்ளனர். 

மாலதி உயிரிழந்து 3 நாட்களாகியும் உடலை அடக்கம் செய்யாததால் அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், வந்த போலீசார் உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments