5 லட்சம் கடனுக்கு, ரூ.5 லட்சம் வட்டி.. தகாத வார்த்தையில் திட்டியதால் எலி மருந்து அருந்தி பெண் தற்கொலை..!

0 3293

விழுப்புரம் மரக்காணம் அருகே 5 லட்சம் ரூபாய் கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 10 லட்சம் ரூபாய் கேட்டு, தகாத வார்த்தைகளால் பேசியதால் மனமுடைந்து, எலி மருந்து அருந்திய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அனுமந்தை மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், தீபாவளி பண்ட் மற்றும் சீட்டு நடத்தியதில் ஏற்பட்ட கடனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து ராஜேந்திரனின் மனைவி மணிமேகலை, அதேபகுதியை சேர்ந்த சீனிவாசனிடம் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று, தனது கணவர் வாங்கிய கடன்களை அடைத்துள்ளார்.

இந்நிலையில் சீனிவாசனின் மனைவி மதி, மணிமேகலையின் வீட்டிற்கு சென்று 5 லட்சம் ரூபாய் அசல் மற்றும் அதற்கு வட்டி 5 லட்சம் என 10 லட்சம் ரூபாயை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் மணிமேகலையை மதி, தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் மனைமுடைந்த மணிமேகலை, எலி மருந்தை அருந்தியுள்ளார். மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments