நடிகை தர்ஷா குப்தா உடை குறித்த நடிகர் சதீஷின் பேச்சுக்கு கண்டனம்..!

0 8514

நடிகை தர்ஷா குப்தா உடை குறித்து நடிகர் சதீஷ் பேசியது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், சதீஷ், தர்ஷாகுப்தா, ஜிபி முத்து உள்ளிட்டோர் நடித்துள்ள "ஓ மை கோஸ்ட்" படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் சதீஷ் பேசும்போது, வடநாட்டு நடிகை சன்னிலியோன் நமது கலாச்சாரப்படி உடை அணிந்து உள்ளார், ஆனால் கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா இப்படி உடை அணிந்து உள்ளார் என்று பேசியிருந்தார்.

சதீஷின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் உடையணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், இத்தனை கூட்டம் உள்ள இடத்தில் ஒரு பெண்ணை ஆடை அணிவது குறித்து சுட்டிக்காட்டி பேசுவது தவறு.

மூடர்கூடம் இயக்குனர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில், சதீஷ் சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான் என்றும் மாற்றமே கலாச்சாரம் என்று பதிவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments