பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் அரசு பள்ளி மாணவர்கள் 68 பேர், கல்விச் சுற்றுலாவாக துபாய் பயணம்

0 2578

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் நடைபெற்ற வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற 68 மாணவ மாணவிகள், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வி சுற்றுலாவிற்காக, திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்டனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் இணைய வழியில் நடத்தப்பட்ட அப்போட்டியில் 68 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்கள், அரசு செலவில் நான்கு நாள் சுற்றுப்பயணமாக துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி சென்றுள்ளனர். இவர்களுடன் 5 தலைமை ஆசிரியர்கள் மற்றும் இரு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்களும் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments