காதல் மனைவியை கொன்ற கணவன்.. ரத்தம் படிந்த கத்தியுடன் நின்றவரை கண்டு அதிர்ந்த மக்கள்..!

0 4853

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைத்து அவரை கொலை செய்த கணவன், கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் நின்று, போலீசாரிடம் இதனை தெரிவிக்குமாறு அக்கம்பக்கத்தினரிடம் கூறிய சம்பவம் சென்னையில் அரங்கேறியது.

சென்னை மண்ணடி பி.வி. ஐயர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஓடிசா மாநிலத்தை சேர்ந்த ஆசிப் - பிரியங்கா பத்ரா தம்பதி வசித்து வந்தனர்.

மைலாப்பூரில் உள்ள தனியார் வங்கியில் ஆசிப் பணியாற்றி வந்த நிலையில், அவரது மனைவி பிரியங்கா, ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக மண்ணடியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், அவர்களது வீட்டில் இருந்து பிரியங்கா பத்ராவின் அலறல் குரல் கேட்கவே, அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டும் போது உடல் முழுவதும் ரத்தக்கறையோடு, கையில் ரத்தம்படிந்த கத்தியோடு ஆசிப் நின்றதாக கூறப்படுகிறது.

அப்போது, தனது மனைவியை கொன்றுவிட்டதாகவும், காவல்துறையினரை அழைக்குமாறும், ஆசிப் அவர்களிடம் தெரிவித்ததாக சொல்லப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.

அங்கு, ஆசிப்பை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்த பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ஆசிப்பிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, தாங்கள் இருவரும் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என்றும், வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் என்பதால் வீட்டில் சம்மதம் தெரிவிக்காத நிலையில், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு, சென்னையில் சில நாட்கள் வேலை தேடியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஒருவர் வங்கியிலும், மற்றொருவர் ஐ.டி. நிறுவனத்திலும் பணியாற்றி கை நிறைய சம்பளம் ஈட்டி வாழ்ந்து வந்த நிலையில், திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என்பதால், இருவருக்கும் இடையே மனகசப்புகள் ஏற்பட்டதாக போலீசாரிடம் ஆசிப் கூறியுள்ளார்.

மேலும், கடந்த சில மாதங்களாக தனது மனைவியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததாகக் கூறி அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த ஆசிப், அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், நேற்று நள்ளிரவு முதல் இருவருக்கும் இடையே நடைபெற்ற தகராறு காலை வரை நீடித்ததாகவும் போலீசாரிடம் ஆசிப் கூறியுள்ளார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியபோது ஆத்திரமடைந்த ஆசிப், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும், ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக மனைவி பகிரங்கமாக தெரிவித்ததால் கொலை செய்ததாகவும் ஆசிப் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரித்து வரும் போலீசார், பிரியங்காவின் செல்போன் மற்றும் மடிகணினி ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments