அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை தடுக்க பறக்கும் படை அமைக்க நீதிமன்றம் உத்தரவு..!

0 2578

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விநியோகத்தை தடுக்கும் வகையில், பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனை நடத்த, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, நாட்டின் பிற மாநிலங்களில் இல்லாத மருத்துவ கட்டமைப்பு, தமிழகத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

மேலும், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய, பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை பின்பற்றலாம் எனவும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தலாம் எனவும், அரசுக்கு யோசனை தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments