சிறு, குறு நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10 சதவீதம் குறைப்பு - தமிழக அரசு..!

0 2610

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உச்சப்பட்ச பயன்பாட்டு நேர கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களில் காலை ஆறரை மணி முதல் பத்தரை மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் 10 மணி வரையிலும் பயன்படுத்தப்படும் மின்சாரம் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரமாக கருதப்பட்டு கூடுதலாக 25 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று குறைந்தழுத்த மின் இணைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு இந்த கட்டணம் தற்போது 15 சதவீதமாக வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments