டிசம்பர் 23ஆம் தேதி ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்..! கூடுதலாக ரூ.5 கோடி செலவிட அணிகளுக்கு அனுமதி

0 5431

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது.

இந்தியாவில் பிரபலமாக நடைபெற்று வரும் இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. நடைபெறும் ஏலத்தில் அணிகள் தங்களது கையிருப்பு தொகையுடன் கூடுதலாக 5 கோடி ரூபாய் செலவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால், ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கான செலவு உச்சவரம்பு 95 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஏலத்தில் 204 வீரர்கள் 551 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments