வேறொருவரின் இடத்தை காண்பித்து, அரசுப் பள்ளி ஆசிரியரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி - 2 பேர் கைது

0 4532

கோவையில் அரசுப் பள்ளி ஆசிரியரிடம் வேறொருவரின் இடத்தை காண்பித்து, 30 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை சிட்ராவைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் கார்த்திக்பிரபு, சொந்த வீடு கட்டுவதற்காக நிலம் தேடி வந்தார். இதனையறிந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர், அவரிடம் காளப்பட்டி நேரு நகரில் நிலத்தை காண்பித்து 30 லட்சம் ரூபாய் முன்பணமாக பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால், அது வெளிநாட்டில் வசிக்கும் வேறொருவரின் நிலம் என்பதும், தான் ஏமாற்றப்பட்டதையும் கார்த்திக்பிரபு உணர்ந்தார். இதுகுறித்து, ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் ஜெகநாதன், கலைவாணி ஆகியோரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments