நீதிபதி சந்திரசூட்டிற்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு

0 2022

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய் சந்திரசூட் இன்று பதவியேற்றுக்கொண்டார். தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித் நேற்றுடன் ஓய்வு பெற்றதை அடுத்து, டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நீதிபதி டி.ஒய் சந்திரசூட்டுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சந்திரசூட் வரும் 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி வரை பொறுப்பு வகிப்பார். நீதிபதி சந்திரசூட்டின் தந்தை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட், உச்சநீதிமன்றத்தின் 16வது தலைமை நீதிபதியாக பணியாற்றியவர்.

நீதித்துறை வரலாற்றில் தந்தையும் மகனும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பது இதுவே முதல்முறையாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments