முட்டை ஏற்றி வந்த சரக்கு வாகனமும் கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

0 2467

கோவை மாவட்டம் சூலூர் அருகே சரக்கு வாகனமும் கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

ஈரோட்டில் இருந்து முட்டை ஏற்றிக் கொண்டு கேரளா நோக்கி சென்ற சரக்கு வாகனமும், கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரியும் எல்என்டி பைபாஸ் சாலையில், வெள்ளலூர் பிரிவு அருகே நேருக்கு நேர் மோதியது.

இதனால், முட்டைகள் சாலையில் சிதறியதோடு, கண்டெய்னர் லாரியின் டீசல் டேங்க் உடைந்து டீசலும் சாலையில் கொட்டியது. இதனால் அப்பகுதியில் தீப்பிடிக்கும் அபாயம் ஏற்பட்டதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

சூலூர் தீயணைப்புத் துறையினர் வந்து தண்ணீரை பீய்ச்சியடித்தபிறகு, சாலை சுத்தப்படுத்தப்பட்டு போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கண்டெய்னர் லாரி முன்னால் சென்ற வேறொரு லாரியை முந்த முயற்சிக்கும்போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments