பள்ளி ஆசிரியையின் கணவர் கடத்தல் தொடர்பான வழக்கில் 3பேர் கைது..!

0 2125

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் பள்ளி ஆசிரியையின் கணவர் கடத்தல் தொடர்பான வழக்கில் 3பேர் கைது செய்யப்பட்டனர். ஆழ்வார்திருநகரியை சேர்ந்த பிரான்சிஸ் விண்ணரசி என்பவர் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பிரான்சிஸ் விண்ணரசிக்கு போன் செய்த கணவர் அலெக்சாண்டர் தாம் ஒரு பிரச்சனையில் மாட்டியுள்ளதாகவும், 25 சவரன் நகை கொண்டு வந்தால் தான் விடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு விருதுநகரில் வாகன சோதனையின் போது சிக்கிய காரில் இருந்து குரூஸ் அலெக்சாண்டரை மீட்டனர்.

விசாரணையில்  பணப்பிரச்னை காரணமாக இந்த கடத்தல் சம்பவம் நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments