விக்ரம்-எஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் தேதி வானிலை நிலவரத்தின் அடிப்படையில் இறுதிசெய்யப்படும் என அறிவிப்பு.!

0 1859

இந்தியாவில் தனியார் விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட்டான விக்ரம்-எஸ் இம்மாதம் 12-ம் தேதி முதல் 16-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரத்தின் அடிப்படையில் தேதி இறுதிசெய்யப்படும் என ஐதராபாத்தை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் தலைமை நிர்வாக அதிகாரி பவன் குமார் சந்தனா தெரிவித்துள்ளார்.

3 வாடிக்கையாளர்களின் செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் விக்ரம்-எஸ் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது.

விக்ரம் சாராபாய் நினைவாக இந்த ராக்கெட்டிற்கு விக்ரம்-எஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments